2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள் – 2’ உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டை பயிற்சி - திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜான், மக்கள் தொடர்பு - மெளனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன், தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுதி இயக்குகிறார் - சமுத்திரகனி.
விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடாலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் சமுத்திரக்கனி, “முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...