‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்கின்றார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சினிமா வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தடைபட்டது.
தற்போது போராட்டம் முடிவடைந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இருந்து அரவிந்த்சாமி வெளியேறியுள்ளார். ஆம், அவரது போஷன் முழுவதும் முடிந்துவிட்டதால், படக்குழுவில் இருந்து அவர் வெளியேறிவிட்டாராம்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அரவிந்த்சாமி, மணிரத்னம் சார், சந்தோஷ் சிவனுடன் பணிபுரிவது ரொம்ப இனிமையானது. ‘செக்க சிவந்த வானம்’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். இந்த படத்தில் எனது அனைத்து போஷன்களும் படமாக்கப்பட்டு விட்டதால், படக்குழுவிடம் இருந்து விடைபெறுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...