Latest News :

வித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் ‘பாண்டி முனி’
Wednesday May-09 2018

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘3’ போன்ற படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன் தற்போது தயாரிக்கும் படம் ‘பாண்டி முனி’.

 

இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முனி என்ற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நிக்கிஷா பட்டேல் நடிக்க இவர்களுடன் பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

மது அம்பாட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ஸ்ரீமான் பாலாஜி கலையை நிர்மாணிக்க, சிவசங்கர் நடனம் அமைக்கின்றார். சூப்பர் சுப்பராயண் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறுகையில், “இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

 

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்கு இருக்கும்.

 

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.

 

படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.” என்றார்.

 

இப்படம் கஸ்தூரி ராஜாவின் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2586

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

‘வருணன்’ அனைவருக்கும் நெருக்கமான கதை - பிரபலங்கள் பாராட்டு
Tuesday March-11 2025

இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...

’கயல்’ வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ டி.ஜே.பானு நடிக்கும் ‘அந்தோனி’!
Tuesday March-11 2025

‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...

Recent Gallery