ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று காலை, படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ரசிகர்களிடம் பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘காலா’ பாடல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ’காலா’ படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’.” என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...