‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீ. தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ ஆகியப் படங்களில் நடித்தார். இவர் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்கள் தான் என்றாலும், ஸ்ரீ தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, விஜய் டிவி-ன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ, உடல் நிலை காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகினார். தற்போது எந்ந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கும் அவர், நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பதை விட்டுவிட்டு இயக்குநராகப் போகிறாராம். தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் ஸ்ரீ, விரைவில் இயக்குநர் ஸ்ரீ ஆக ரசிகர்களிடம் அறிமுகமாக உள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...