ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் பாடல்கள் நேற்று காலை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த் அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருந்தாலும், அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்த கட்சி பெயர் குறித்த தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை. படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், காலா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.75 கோடி கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு விஜய் டிவி வாங்கியுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...