அரவிந்த்சாமி, அமலா பால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் இன்று வெளியாக இருந்த நிலையில், மீண்டும் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், சூரி, ரோபோ சங்கர், நாசர் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் போன நிலையில், இன்று (மே 11) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது. நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சி திறையிடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில், இப்படம் மே 11 ஆம் தேதி வெளியாகது, என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
வாரத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறைப்படி, வாரம் நான்கு படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம், விஷாலின் ‘இரும்புத்திரை’, கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ வெளியாக இருந்த நிலையில், இந்த போட்டியில் இருந்து அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...