சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் விமர்சித்து வருவதோடு, பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டால், அவர்களை காறி துப்பி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் கஸ்தூரியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆபாச வீடியோக்களை வெளியிடும் ‘X வீடியோஸ்’ என்ற இணையதளத்தால் எப்படி மக்கள் பாதிக்கப்புக்குளாகிறார்கள் என்றும், அதில் தங்களுக்கே தெரியாத தங்களைப் பற்றிய அந்தரங்க வீடியோக்கள் எப்படி வெளியிடப்படுகிறது என்பதையும் மக்களுக்கு சொல்லும் விழுப்புணர்வுப் படமாக உருவாகியுள்ள ‘எக்ஸ் வீடியோஸ்’ திரைப்படத்தில் தற்போது நடிகை கஸ்தூரி இணைந்திருப்பது, இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஜோ சுந்தர் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் எப்படி விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதை சொல்லியிருப்பதோடு, ‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற இணையதளத்தால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருப்பதோடு, ஸ்மார்ட்போனால், நான்கு சுவர்களுக்கு நடக்கும் அந்தரங்க விஷயங்கள் தங்களுக்கே தெரியாமல் எப்படி வெளியே போகிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
விரைவில் வெளியாகும் இப்படத்தின் டிரைலரை இன்று நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்துடன் நடிகை கஸ்தூரி இணைந்ததால், இப்படம் குறித்த தகவல்கள் மற்றும், அவர் டிரைலரை வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
தலைப்பு ‘எக்ஸ் வீடியோஸ்’ என்று அந்த ஆபாச இணையதளத்தின் பெயராக இருந்தாலும், படம் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதத்திலோ அல்லது பார்க்க முடியாத காட்சிகளோ படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், பெண் அதிகாரி உள்ளிட்ட சென்சார் அதிகாரிகள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...