‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். தனது முதல் படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், வில்லன் மட்டும் அல்ல குணச்சித்திர வேடம் உள்ளிட்ட எந்த வேடத்தில் நடிக்க தான் ரெடி, என்று அவர் கூறியிருந்தார்.
அதன்படியே ‘நரை’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து வரும் பப்ளிக் ஸ்டார், தான் நடித்து வரும் படங்கள் குறித்து எந்த விஷயத்தை வெளியிடாமல் ரகசியம் காத்து வர, ‘நரை’ படத்தின் இயக்குநர் விவி, மட்டும் பப்ளிக் ஸ்டாரின் கதாபாத்திரம் குறித்து வாய் திறந்திருக்கிறார்.
வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லட்த்ஹில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் நடக்கும் நடக்கும் சம்பவம் இவர்களை நிலை குலைய செய்கிறது. அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது? அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை திடுக்கிட வைக்கும் முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன், என்று கூறிய இயக்குநர் விவி, இதில் ‘தப்பாட்டம்’ பட ஹீரோ பப்ளிக் ஸ்டார் துரை சுதாகாரை வில்லனாக களம் இறக்கியுள்ளேன்.
அவரை நான் முதன் முதலில் சந்தித்த போதே, என் படத்தில் இவரை வில்லனாக்கியே தீருவேன், என்று முடிவு செய்துவிட்டேன். ஏன் என்றால் எனது வில்லன் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் பொருத்தமாக இருந்தார். அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்துள்ளார். கிளைமாக்ஸில் இவர் வரும் காட்சி தான் படத்தின் திருப்பு முனை, இனிமேல் தமிழ் திரையுலகின் பவர் புல் வில்லன் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தான், என்று தெரிவித்தார்.
கே 7 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், பெருமாள் சசி, அனுப் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் ரோஹித் என்ற புதுமுக நாயகனும், லீமா, ஈதன் என்ற இரண்டு நாயகிகளும் நடித்துள்ளனர்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...