நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ சீசன் 2 நிகழ்ச்சி மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் பகுதி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார். அதே சமயம், இதில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் யார் யார், என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே சமயம், பல முன்னணி நடிகர் நடிகைகள் பிக் பாஸ் இரண்டாம் சீசனில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராய் லட்சுமி, பிக் பாஸ் இரண்டாம் பகுதியில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை மறுத்துள்ள ராய் லட்சுமி, அதே சமயம் பிக் பாஸ் இரண்டாம் பகுதியில் பங்கேற்பதற்கான தனது விருப்பத்தை மறைமுகமாவும் சொல்லியிருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராய் லட்சுமி, “ஏன் அடிக்கடி இதுபோல வதந்தி பரப்புகிறீர்கள். நான் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றால்.. வீடே பற்றி எரியும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...