ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்காது, என்று பலர் எதிர்ப்பார்த்த நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். அதிலும், இறுதிப் போட்டிக்கு தேர்வான பெண்கள் ஆர்யா தான் தனது கணவர் என்ற கற்பனையிலும் வாழ தொடங்கினார்கள்.
அதில் ஒருவர் தான் அபர்ணதி. ஆனால், இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டு விட்டாலும், இறுதியில் ஆர்யா திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததால், அவர் அபர்ணதி மீது உள்ள காதலால் தான் இந்த முடிவை எடுத்தார் என்று கூறினார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த அபர்ணதி, ”நான் கல்யாணம் பண்ணமாட்டேன். இன்னும் 40 அல்லது 50 வருடம் இருக்குற லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணுவேன். என்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த வேண்டாம் என பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை, அதை தாண்டி எவ்ளோவோ இருக்கு. உலகத்தை சுத்த போறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அபர்ணதியின் இந்த பேட்டியை தொடர்ந்து, அவர் ஆர்யா மீது பெரும் காதல் கொண்டிருப்பதாகவும், ஆர்யாவும் அபர்ணதியை காதலித்துவிட்டு, பிரிந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டு வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...