அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில், சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸாகமல் போன நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்பே இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒன்றரை மாதம் தள்ளிப்போன ரிலீஸ், போராட்டம் முடிந்த பிறகு உடனே வெளியாக இருந்தது. ஆனால், அப்போதும் ரிலீஸ் ஆகாமல் போனது. இதையடுத்து கடந்த வாரம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், கடந்த வாரமும் ரிலீஸாகவில்லை.
இதனால் படத்தின் ஹீரோ அரவிந்த்சாமி, ஹீரோயின் அமலா பால் உள்ளிட்டவர்கள் வருத்தமடைந்ததோடு, தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் மே 17 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...