விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஆக.20) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள நிலையில், தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகருக்கும் இதுவரை கிடைத்திராத கவுரவம் விஜய்க்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் ‘மெர்சல்’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாக விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்க, தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முறையாக விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ட்விட்டரில் எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தென்னிந்திய சினிமாவில் ட்விட்டர் எமோஜி உருவாக்கப்பட்ட முதல் நடிகர் என்ற சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள மெர்சல் பாடல்களில் ஏற்கனவே “ஆளப்போறான் தமிழன்’, “நீதானே...” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...