சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறி வந்த நிலையில், விஷ்ணுவர்தன், இந்தி படம் இயக்க சென்றுவிட்டதால், அஜித்தை இயக்க கூடிய இயக்குநர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ எதிர்ப்பார்த்த வெற்றிப் பெறவில்லை என்றாலும், தான் நடித்த படங்களில் என்னை அறிந்தால் அஜித்துக்கு பிடித்த படம் என்பதால், அவர் கெளதம் மேனன் மீது மரியாதை வைத்திருக்கிறாராம். அதனால், அவரது படத்தில் மீண்டும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அப்படத்திற்கு பிறகு மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே அஜித்துக்காக கதை ஒன்றை எழுதியுள்ள அவர், அதை சொல்வதற்காக அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம். தற்போது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இருக்கும் அஜித், நேரம் கிடைத்தால் கெளதம் மேனனிடம் கதை கேட்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, அஜித் மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...