விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘இரும்புத்திரை’ படம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தனது அடுத்தப்படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சூரி, சதீஷ், ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விஷாலின் 25 வது படமாக உருவாகும் ‘சண்டக்கோழி 2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “சண்டக்கோழி 2’ முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம். சங்கத்திலும் அதற்கான அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்றார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...