தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்கள் மனதில் சத்யாவாகவே வாழ்ந்து வரும் அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
சின்னத்திரையில் இருந்த பலர் வெள்ளித்திரைக்கு எண்ட்ரி கொடுத்தாலும், வாணி போஜன் மட்டும் சினிமா வாய்ப்பை ஏற்க மறுத்தார். அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டதற்கு, சினிமாவில் நடிக்க தனக்கும் விருப்பும் உண்டு, ஆனால் வரும் வாய்ப்புகள் சரியாக இருக்க வேண்டும், ஏதோ வந்தோம் நடித்தோம் என்று அல்லாமல், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதற்கான சரியான வாய்ப்பாக இருக்க வேண்டும், அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன், என்றார்.
இந்த நிலையில், சத்யாவின் எண்ணத்திற்கு ஏற்றவாறு அவரது திறமையைக் காட்ட சரியான வாய்ப்பு தற்போது கிடைத்துவிட்டது. ’என் மகன் மகிழ்வன்’ என்ற விருது படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படத்தின் ஹீரோயினாகியுள்ளார் வாணி. அந்த படத்திற்கு ’என்.ஹெச்.4’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற இயக்குநரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாவதால், இப்படத்திற்குப் பிறகு தனது சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும், என்று நம்பும் வாணி போஜ, டிவி-க்கு விடை கொடுக்கவும் முடிவு செய்துவிட்டாராம்.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...