‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மெர்சல்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்திருந்தாலும், அட்லீயின் அடுத்தப் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, அட்லீ விஜயை மீண்டும் இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு அவர் ஒரு தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற அட்லீயை, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அட்லீ, “நான் தெலுங்குப் படம் நிச்சயம் இயக்குவேன். ஆனால் எனது அடுத்தப் படம் தமிழ்ப் படம் தான். அதற்குப் பிறகு தான் தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன்.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், அட்லீ அடுத்ததாக தெலுங்குப் படம் இயக்கப் போகிறார், என்று பரவி வந்த சர்ச்சையான வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...