‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தின் முதல் பாகத்தில் இருந்தே அனைத்து நடிகர்களும் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்ர்கள். ஆனால், நாயகி காஜல் அகர்வால் மட்டும் கழட்டி விடப்பட்டுள்ளார்.
காஜலுக்கு பதிலாக புதிய நாயகியை ஒப்பந்தம் செய்துள்ள படக்குழு, படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைகஞர்களும், முதல் பாகத்தில் பணியாற்றியவர்கள் என்றாலும், இசையமைப்பாளர் மட்டும் மாற்றப்பட உள்ளார். அதேபோல், படத்தின் வில்லன் தேர்வும் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...