தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றுவிட்டார். கமல், அஜித், சிரஞ்சீவி என்று தற்போது மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நாயகியாகியுள்ள அவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனால் அடுத்த ஆண்டும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக நயந்தாரா தான் வலம் வருவார், என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த இடம் அவரை விட்டு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆம், ’நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் சென்றிருக்கும் உயரத்தைப் பார்த்து நயந்தாரா பீதியடைந்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, அப்படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷின், நடிப்பை ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். நடிக்க தெரியாத நடிகை, என்று பெயர் எடுத்த கீர்த்தி சுரேஷை தற்போது நடிகையர் திலகத்திற்கு சமமாக வைத்துப் பார்க்க தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. இதனால், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனைத்தும் அவர் வசம் செல்லுவதற்கான வாய்ப்பும் அதிகமாம்.
இந்த காரணங்களுக்காக சற்று ஜெர்க்காகியிருக்கும் நயந்தாரா, தனது நடிப்பு திறமையை மீண்டும் நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதோடு, ஏற்கனவே இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தால், அக்கா போல இருப்பதாக விமர்சனத்தில் குறிப்பிடுவதால் உடல் எடையை குறைத்து மேனஜ் செய்யும் அவர், தற்போது கீர்த்தி சுரேஷின் திடீர் ரீச்சைக் கண்டு ரொம்பவே கலக்கம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், ஒரு படத்தில் தானே கீர்த்தி ரீச் ஆகியிருக்கிறார், அவரது அடுத்தப் படத்தை பார்ப்போம், என்று தன்னை தானே சமாதானமும் படுத்திக்கொள்கிறாராம்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...