ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.ஜி, ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் ‘திருப்பதிசாமி குடும்பம்’.
இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஒய்.எம்.முரளி, இசை - சாம் டி.ராஜ், எடிட்டிங் - ராஜா முகமது, நடனம் - தினேஷ், ஹபீப், ஸ்டன்ட் - பயர் கார்த்திக், இணை தயாரிப்பு - திருப்பூர் கே.எல்.கே.மோகன், தயாரிப்பு - பாபுராஜா, பி.ஜாஃபர் அஷ்ரப்.
இப்படத்தை இயக்கியிருக்கும் சுரேஷ் சண்முகம், சரத்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற ‘அரசு’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறுகையில், “ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.
அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலித் தனமாக பிரச்சினைகளை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.
காக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் ’திருப்பதி சாமி குடும்பம்’ வெற்றி பெற்று பாராட்டை பெரும்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இப்படம் இம்மாதம் (மே) 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...