தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக திகழும் முன்னாள் பெப்சி தலைவரும், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றத்தின் தலைவருமான பெப்சி சிவா, பா.ஜ.க-வில் இணைந்தார்.
ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவா, சங்கீதாவை வைத்து ‘தனம்’ என்ற படத்தை இயக்கினார். மேலும், கடந்த 25 வருடங்களாக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல சங்கங்களில் பொறுப்புகளில் பதவி வகித்து வந்தார்.
தற்போது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கல் மாமன்றத்தின் தலைவராக பதவி வகித்து வரும் பெப்சி சிவா, நெய்வேலி மற்றும் ராமேஸ்வரம் போராட்டங்கள் உள்ளிட்ட தமிழின போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சீமான், ஆர்.கே.செல்வமணி ஆகியோரடு தமிழினத்திற்காக தமிழ்நாடு முழுக்க பரப்புரையில் ஈடுபட்டு வந்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கட்டங்களில் ஆதரவாக செயல்பட்டு வந்ததோடு, கலைத்துறையினராலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர், தற்போது பா.ஜ.க வில் இணைந்தார்.
தஞ்சையில் நடைபெற்ற பா.ஜ.க மாநாட்டில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களோடு சிவா பா.ஜ.க-வில் இணைந்தார்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...