‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திற்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்யும் யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் ‘பேய் பசி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைத்து, பாடி, நடனமும் ஆடியிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவினயம் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ‘சூது கவ்வும்’, ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
யுவனின் நடத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது ‘பேய் பசி’ படத்துக்கு மிக பெரிய பலம்.
கதா நாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.” என்றார்.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...