டான்சராக சினிமா பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர், இயக்குநர் அவதாரம் எடுத்து பாலிவுட்டில் நம்பர் ஒன் இயக்குநர்களில் ஒருவரானவர், தமிழிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் பிரபுதேவா, இயக்குநருக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ’யங் மங் சங்’, ‘லட்சுமி’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்து வரும் பிரபுதேவா தனது அடுத்தப் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார்.
பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...