’இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இழக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கெசன்ரா, நந்திதா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இணைந்திருப்பதாலும், இப்படம் திகில் படம் என்பதாலும் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ரிலீஸாகமல் போனது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “படம் தயாரிப்பாளரின் கையில் இருக்கிறது. வெகு விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.
இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ் மதன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...