தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தனது கவர்ச்சியால் கலக்கி வந்த நமீதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தனது வாழ்க்கையில் பல அதிரடிகளை அறங்கேற்றினார். திடீரென்று திருமணம் குறித்து அறிவித்தவர், தெலுங்கு நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு நமீ, நடிப்பாரா அல்லது நடிப்புக்கு விடை கொடுப்பாரா, என்ற நிலையில், தற்போது மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாக இருக்கிறார். ஆம், டி.ராஜேந்தர் இயக்க இருக்கும் புதிய படத்தில் நமீதா வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் நமீதாவும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் குறைவான நாட்கள் மட்டுமே இருந்துவிட்டு சென்ற நமீதாவை மீண்டும் களம் இறக்க பிக் பாஸ் குழு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை சக்ஸாகவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூவமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...