தொலைக்காட்சி தொடர்களில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவைகளில் ‘ராஜா ராணி’ தொடரும் ஒன்று. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களும் மக்களிடம் பெரிய அளவில் ரீக் ஆகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் வினோ கதாபாத்திரத்தில் நடித்த வைஷாலி தனிகா.
வினோ என்ற கேரக்டர் மூலம் மக்களிடம் பிரபலமான இவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகியிருப்பது, இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. நல்லா தான் போயிட்டு இருந்தது, பிறகு ஏன் இந்த விலகல், என்று சமூக வலைதளங்களில் இவரை கேட்காதவர்களே இல்லை, என்ற நிலையில், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார்.
”எனக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கிறதால் டாக்டர்ஸ் மூணு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. சீரியலில் என் கேரக்டருக்கு பிரேக் விடமுடியுமான்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். 'இல்லைம்மா, இந்த கதாபாத்திரம் தொடர்ந்து இருக்கணும்'னு சொல்லிட்டார். அதனால், சீரியலிலிருந்து விலகவேண்டியதாயிடுச்சு. ராஜா ராணி எனக்கு பெரிய ரீச் கொடுத்துச்சு, அப்படிப்பட்ட சீரியலில் திடீரென்று விலகியது எனக்கும் வருத்தம் தான், சூழ்நிலை அப்படி. மூனு மாஷம் கழிச்சி இதே சீரியலில் ரீ எண்ட்ரி கொடுப்பேனா என்று தெரியாது, ஆனால் வேறு சீரியலில் நிச்சயம் நடிப்பேன்.” என்றார்.
சீரியல் மட்டும் அல்ல சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ படத்திலும் வைஷாலி நடித்திருக்கிறாராம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...