Latest News :

சென்னையில் நடக்கும் விஜயின் அரசியல் மாநாடு!
Monday May-21 2018

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தமிழகத்தில் நிலவி வரும் ஒரு முக்கிய பிரச்சினையை பற்றி பேசும் கதையாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் இரவு நேரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷைவ் ஐத்து ஸ்டைலிஷான பாடல் ஒன்றை படமாக்கினார்.

 

இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் அரசியல் மாநாடு காட்சியை படமாக்கி வருகிறார்களாம். ஏற்கனவே, அரசு பள்ளிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் கல்வியை மையமாக வைத்து கதை நகரும் என்ற எதிர்ப்பார்ப்பில் தற்போது அரசியல் மாநாடு காட்சி படமாக்கப்படுவதால், அரசியல் பின்னணி படத்தில் பலமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதோடு, எழுத்தாளர் பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோரும் அரசியல்வாதி வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களோடு பிரபல நடன இயக்குநர் சிவசங்கரும் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

2659

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

Recent Gallery