நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று தான். காமெடி நடிகர் யோகி பாபு நயந்தாராவிடம் காதலை சொல்வது போல படமாக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
இந்த வீடியோவை அடுத்து வெளியிடப்பட்ட “கல்யாண வயசு...” பாடலும் பெரிய அலவில் ரீச் ஆகியிருக்கிறது. அதே சமயம், இந்த பாடல் ஆங்கில இசை ஆல்பத்தின் காப்பி என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், “கட்ணா கோலமாவு கோகிலாவ (நயந்தாராவ) கட்டணும், இல்லனா கட்டிணவனுக்கு கை குடுக்கணும்” என்று நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி பதிவிட்டுள்ளார். மேலும், நயந்தாராவுடன் நடித்த யோகி பாபுவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
நயந்தாராவை விரும்பாதவர்களே என்ற நிலையில், நட்டி தனது மனதில் இருந்த ஆசையை ‘கோலமாவு கோகிலா’ மூலம் மறைமுகமாக தெரியப்படுத்தி விட்டதாக அவரது டிவிட்டுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...