பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு எதிராக போராடிய தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து பல அந்தரங்க தகவல்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தனது தடை விதித்த நடிகர் சங்கம் முன்பாக நிர்வாண போராட்டத்தை நடத்தி தெலுங்கு திரையுலகையே அதிர வைத்தார்.
இந்த நிலையில் சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் பேசுகிறார்.
ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர். அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் ஸ்ரீரெட்டி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...