தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதாக விளங்கிய விஜய் அவார்ட்ஸ், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிறது.
வரும் மே 26 ஆம் தேதி சனிக்கிழமை 10 வது வருட நிகழ்ச்சியாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. நடிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் விதத்தில் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த ஆண்டு விருது வழங்க உள்ளனர்.
மேலும், நடிகைகள் அஞ்சலி, சாயிஷா சாய்கல், காஜல் அகர்வால், நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடன நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
நடிகை ராதா, இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ், யூகி சேது ஆகியோர் இந்த ஆண்டு விருதுக்கான ஜூரிகளாக இருந்தாலும், பேவரைட் வகை விருதுகள் மக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் பேவரை நடிகர், நடிகை, இயக்குநர், பாடல், படம் ஆகியவைகள் அடங்கும்.
தங்களுக்கு பிடித்தமான திரை நட்சத்திரம் இந்த விருதை பெற நினைக்கும் ரசிகர்கள் Vijayawards.in என்னும் இணையதளம் மூலம் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரத்திற்கு வாக்களிக்கலாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...