Latest News :

’சாமி 2’ மூலம் மிரட்ட வரும் தேவி ஸ்ரீபிரசாத்!
Tuesday May-22 2018

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ’ரங்கஸ்தலம்’, ’பரத் அனே நேனு’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களே இல்லை எனலாம்.

 

சீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

 

விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Related News

2668

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

‘வருணன்’ அனைவருக்கும் நெருக்கமான கதை - பிரபலங்கள் பாராட்டு
Tuesday March-11 2025

இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...

’கயல்’ வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ டி.ஜே.பானு நடிக்கும் ‘அந்தோனி’!
Tuesday March-11 2025

‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...

Recent Gallery