தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசர், தான் பதவி ஏற்றவுடன் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். தற்போது இரண்டாம் முறையாக இன்று அவர் மீண்டும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
திருநாவுக்கரசரின் இளையமகள் அமிருதாவுக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் நணபராக உள்ள திருநாவுக்கரசர் இன்று ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...