தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக உயர்ந்திருக்கும் யோகி பாபு, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதோடு, அவர் இல்லாத படங்களே இல்லை, என்ற அளவுக்கு அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தவம் கிடைக்கிறார்கள்.
இதற்கிடையே, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயந்தாராவை ஒன்சைடாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், நயந்தாராவை நினைத்து பாடும் டூயட் பாடல் செம டிரெண்டிங்காகியுள்ளது.
இந்த நிலையில், நயந்தாராவுடனான பாட்டே யோகி பாபுக்கு வேட்டும் வைத்திருக்கிறது. ஆம், அப்பாடல் காட்சியை பார்த்த யோகி பாபின் அம்மா, ”முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்டா... இப்படிப் பாட்டு பாடி மானத்தை வாங்கிட்டு இருக்க'னு” சொன்னாங்களாம். சொன்னது மட்டும் அல்ல, யோகி பாபுவுக்கு பெண் தேடவும் ஆரம்பித்து விட்டாங்களாம். எப்படியோ இந்த ஆண்டு முடிவிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ யோகி பாபு இல்லற வாழ்க்கையில் நுழைவது உறுதியாகிவிட்டது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...