தனது திரைப்படங்கள் மூலம் சமூக பிரச்சினைகளை பேசும் இயக்குநர் ஷங்கர், நிஜ வாழ்க்கையில் எதிர்மறையாக இருப்பவர், என்பது அவரது ட்வீட்டர் பதிவால் தெரிந்துவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர், நேற்று ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். அவரது இத்தகைய செயல் தமிழக மக்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து பலர் ஷங்கரின் டிவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ”நேற்று எப்படிபட்ட ஒரு பிரச்சனை நடந்தது அப்போது தெரியவில்லை CSK முக்கியம் இப்போது சம்பவம் குறித்து பதிவிடுகிறீர்கள்” என்று பதிவிட்டிருப்பதோடு, “சமூக அக்கறை எல்லாம் திரையில் மட்டும் தானா” என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் கோபத்தை உணர்ந்த இயக்குநர் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி குறித்து பதிவிட்டது நீக்கிவிட்டார்
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...