சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு திரையுல பிரமுகர்கள், விமர்சகர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு குறிப்பிட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் இப்படம் கவர்ந்ததால், இப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜ செம லாபம் பார்த்துவிட்டாராம்.
ஞானவேல்ராஜாவுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு வெற்றியை முரட்டு குத்து படம் கொடுத்ததால், தற்போது தமிழ் சினிமாவில் அதே பாணியில் சில படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து, ’அட்ட கத்தி’ தினேஷும் அப்படி ஒரு ஆபாசப் படத்தில் நடித்து வருகிறார். ‘பல்லு படாம பாத்துக்க’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் வரதராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும், ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்ற தலைப்பில் ஒரு படமும் உருவாகிக் கொண்டிருக்க, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...