நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையப்படுத்தி ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் பங்கேற்ற பெண்களில், அபர்ணதி என்பவரை தான் ஆர்யா காதலிப்பதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், ரசிகர்களின் ஆதரவும் அபர்ணதிக்கு தான் இருந்தது.
ஆனால், இறுதி போட்டிக்கு முன்பதாகவே அபர்ணதி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கடுப்பான அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி குறித்து தாறுமாறான பதிவுகளை ட்விட்டரில் போட்டு வந்தனர். அதே சமயம் போட்டி முடிந்து ஆர்யா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றாலும், அபர்ணதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி மட்டும் குறையவில்லை. அவரை ஊடகங்கள் பேட்டி எடுப்பதும், அதன் மூலம் அவர் எதாவது பரபரப்பாக பேசுவது என்று பிஸியாகவே இருந்தார்.
இந்த நிலையில், பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க அபர்ணதி கமிட் ஆகியுள்ளார். வசந்தபாலான் இயக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் ஹீரோ. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறதாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...