நடிகர் அஜித்குமார் தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் ஏதும் இல்லை என்று ஏற்கனவே அறிவித்தார். மேலும் மற்ற நடிகர்களைப் போல எந்தவித சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்துக் கொள்ளாமல் தனது வேலை உண்டு தான் உண்டு என்று இருக்கிறார்.
இதற்கிடையே, சில நெட்டிசன்கள், சில நிறுவனங்கள் அஜித்தின் கருத்து என்று கூறி, தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அத்தகைய செயல்களை தொடர்ந்தால், சவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பேன், என்று நடிகர் அஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அஜித்குமார் சார்பில், அவரது சட்ட ஆலோசகர் எம்.எஸ்.பரத் என்பவர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “25 ஆண்டுகளாக திரை துறையில் நீடித்து வரும் எனது கட்சிக்காரர் அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர், சமூகத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவுபவர். மற்றும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படும் ஒரு குடிமகன் ஆவார்.
எனது கட்சிக்காரர் எந்த அரசியல் இயக்கத்தையும் (பிராந்திய மற்றும் தேசிய கட்சிகள் உட்பட) சார்ந்தவர் இல்லை. தனது சுய சிந்தனைப்படி ஜனநாயக முறையில் வாக்களிப்பவர். தனது ஜனநாயக நம்பிக்கையையும் சிந்தனையையும் தனது ரசிகர்கள் இடையேயும், பொது மக்கள் இடையேயும் எப்போதும் திணித்ததும் இல்லை. எனது கட்ச்சிக்காரர் எந்த வணிக சின்னத்தையும், பொருளையும், நிறுவனத்தையும், அமைப்பையும், சங்கத்தையும் சார்ந்து அதன் விளம்பர தூதராகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தற்போது செயல்படுவது இல்லை.
எனது கட்சிக்காரர், தனது வளர்ச்சிக்கு ஊக்க துணையாக இருந்த உண்மையான ரசிகர்கள், தன்னை பின்பற்றுபவர்கள், திரை பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்று இல்லை என்று தெளிவுப்படுத்தினார்.
எனது கட்ச்சிக்காரருக்கு அதிகாரப்பூவர் பேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களில் கணக்கு இல்லை என்பதை தெரிவிக்கிறார். ஆயினும் சில தனிப்பட்ட அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்து கொண்ட சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை எனது கட்சிக்காரைன் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் எனது கட்சிக்காரரின் பெயரையும் புகை படத்தையும் அவரின் அனுமதி இல்லாமல், அங்கீகாரம் இல்லாமல் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்கள் எனது கட்சிக்காரர் சார்ந்த திரை துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், பல தனி நபர்களையும், பொது மக்களையும் கூட தகாத முறையில் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது எனது கட்சி காரருக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்பேர்ப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செய்ல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் என் கட்சிகாரர் தன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...