திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி தொடர்கள் மீது மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பெண்கள் தான் சீரியல்களின் பரம விசிரிகளாக இருந்ததோடு, தற்போது இணைய பயன்பாட்டின் அதிகரிப்பால் இளைஞர்களும் சீரியல்களை விரும்பு பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, சீரியல்களை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள். இதனால், சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் உடை, மேக்கப் என்று அனைத்தும் முக்கியத்துவம் பெருகிறது. நடிகர்களும் அதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார்கள்.
இந்த நிலையில், சீரியல் ஒன்றில் நடிப்பதற்காக நடிகை ஒருவர் தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வரும் ஜீவிதா, தனது கதாபாத்திரத்திற்காக தனது நீளமான முடியை குட்டையாக வெட்டிக் கொண்டதோடு, தன் நெற்றியில் இருந்த மருவை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட்டாராம்.
அதேபோல், உடைகளுக்காக அதிகமாக செலவு செய்வதாக கூறியுள்ள அவர், எப்படியெல்லாம் உடை அணியலாம், அதில் எப்படி எல்லாம் வித்தியாசம் காட்டலாம் என்று யோசித்து செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...