அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லன் வேடத்தில் அவர் நடித்திருந்தாலும், அதை இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல், விவேக் ஒபராயும் ‘விவேகம்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், சென்னைக்கு வந்துள்ள விவேக் ஒபராய், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது தமிழ்ப் பட அனுபவம் மற்றும் ‘விவேகம்’ குறித்து நம்மிடையே பகிர்ந்துக்கொண்டது இதோ,
நான் கதை தேர்வில் மிகவும் கனவமாக இருப்பேன். அதிகம் படம் பண்ணுவதை விட தேர்ந்தெடுத்து குறைவான படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொழில், அறக்கட்டளை இவர்களைப் பார்க்க வேண்டும், அத்துடன் எனது குடும்பத்துடனும் நிறைய நேரங்களை நான் செலவிடுவேன். அதனால் தான் வருடத்திற்கு ஒரு படம், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கிறேன்.
விவேகம் கதையை என்னிடம் சிவா சொல்ல வந்த போது, மொழி தெரியாத படத்தில் நடிக்க வேண்டுமா? என்று எனக்கு தோன்றியது. ஆனால், அவர் கதை சொல்ல ஆரம்பித்த 15 வது நிமிடத்தில் நான் நடிக்க சம்மதித்துவிட்டேன். காரணம், அந்த அளவுக்கு கதையை அவர் என்னிடம் விவரித்தார்.
படத்தில் எனக்கு வில்லன் வேடம் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் அஜித்தின் நெறுங்கிய நண்பராக தான் நடித்துள்ளேன். நானும், அவரும் பயிற்சி பெற்ற ஸ்பை கேரக்டரில் நடித்திருக்கிறேன், என்றவரிடம், “அஜித்துக்கும் உங்களுக்கும் இடையிலான ஆக்ஷன் காட்சிகள் எப்படி வந்திருக்கிறது?” என்றதற்கு, எங்களுக்கு இடையே ஆக்ஷன் காட்சி இருக்கிறதா?, அது படம் பார்த்தால் தான் தெரியும். அதற்கு 24 ஆம் தேதி வரை காத்திருங்க, இப்போதே எல்லாமே தெரிந்துவிட்டால், படம் பார்க்கும் போது த்ரில் இருக்காது, என்றார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வெப் சீரிஸில் நடித்தது ஏன்?
நான் கம்பெனி படத்தில் நடித்த போது ஆக்ஷன் படத்தில் ஏன் நடிக்கிறாய், என்றார்கள். ஆனால் அந்த படம் ஹிட் ஆனதும், ஆக்ஷன் ஹீரோ உனக்கு சூட்டாகிறது என்றார்கள். பிறகு சாத்தியா படத்தில் நடித்த போது, ரசிகர்கள் உன்னை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கும் போது, இப்படி காதல் படத்தில் நடிப்பதா, என்றார்கள். ஆனால், அந்த படம் ஹிட் ஆனதும், சாக்லெட் பாயாகவும் நடிக்கலாம், என்றார்கள். பிறகு காமெடி படத்தில் நடித்த போதும் இதுபோன்ற கருத்துக்கள் தான் வந்தது. அதுபோல தான் இதுவும். இது புதிய பிளாட்பார்ம். இன்று இந்தியா முழுவதிலும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை 2.5 கோடி தான் என்று கூறுகிறார்கள். ஆனால், ஸ்மார்ட் போனை சுமார் 40 கோடி பேர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெப் சீரிஸை பார்க்கிறார்கள். அந்த 40 கோடி பேரிடம் நாம் சென்றடைவதில் தவறு வேறு ஏதும் இல்லை. மேலும், நான் இதுபோன்ற துறையில் நுழைவதால், என்னை போன்ற பல முன்னணி கலைஞர்களும் இந்த துறைக்கு வருவார்கள்.
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்டி கொடுத்தீர்கள், அந்த தருணத்தை இப்பவும் நினைத்து பார்க்கிறீர்களா?
அது ரொம்பவே உணர்வு பூர்வமான அனுபவம். டெல்லியில் வேறு ஒரு நிகழ்வில் நான் பேசிக் கொண்டிருந்த போது, “விவேக் அண்ணா...விவேக் அண்ணா...” என்று ஒருவர் என்னை அழைத்தார். அவரிடம் பேசிய போது, எனது உதவியில் அவர் படித்து, தற்போது டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியவர், என்னை போல அவரும் பலருக்கு உதவி செய்ய இருப்பதாக கூறினார். அதை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
அஜித்துடன் நடிப்பதற்கு உங்கள் அம்மா என்ன சொன்னார்?
எங்க அம்மா சொன்னத விடுங்க. எனது கசின் சகோதரர்கள், மாமா, பெரியம்மா போன்றவர்கள் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நான் அஜித்துடன் நடிப்பது தெரிந்ததும், “தலயுடன் நடிக்கிறீயா..” என்று கேட்டு மகிழ்ந்தார்கள். அப்போதே தெரிந்தது அஜித் எவ்வளவு பெரிய ஆக்டர் என்று.
அஜித்துடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
அவர் பெரிய நடிகர் என்று எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார். செட்டில் அனைவருடம் சகஜமாக பழகுவார். நான் முதல் நாள் செட்டுக்கு சென்றதும், அவர் என்னிடம் “என்னுடன் நடிக்க சம்மதித்ததற்கு நன்றி” என்றார். எவ்வளவு பெரிய நடிகர், இவ்வளவு சிம்பிளாக இருக்கிறாரே என்று வியந்தேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் அவர் டீ கொண்டு போய் கொடுப்பார். எனது உதவியாளர்கள் அமர்ந்திருப்பார்கள், அவர்களிடம் வந்து டீ வேண்டுமா? என்று கொடுப்பார். அதையெல்லாம் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
அதேபோல், உழைப்பதிலும் அவர் தான் முதல் நபராக இருப்பார். பல்கேரியாவில் மைனஸ் 14 டிகிரி குளிர் இருக்கும். அதனால் ஓட்டலில் ஒருவர் கூட அதிகாலையில் எழுந்திருக்க மாட்டார்கள். நான் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு போவேன், ஆனால் எனக்கு முன்பு அங்கு அஜித் இருப்பார். இது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, எப்போதும் அவர் தான் அதிகாலையில் எழுந்துக்கொள்வார்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டுகிறீர்களே, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?
அரசியலில் ஈடுபட்டால் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது அமைப்பை மட்டும் தான் சார்ந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நான் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அம்மாநில முதல்வர்கள் எனக்கு உதவ முன் வருகிறார்கள். நான் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து, அம்மாநில முதல்வர்களை அனுகினால், அவர்கள் என்னை வரவேற்று எனக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருந்தால், இதெல்லாம் நடக்காது. அதனால் அரசியலில் நான் ஈடுபட மாட்டேன்.
இப்படி அனைத்து கேள்விகளுக்கும் கலகலப்பாக பதில் கூறிய விவேக் ஒபராய், ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தாலும், ஷாலினியின் தீவிர ரசிகராம். ‘அலைபாயுதே’ படத்தை பார்த்துவிட்டு ஷாலினிக்கு ரசிகரான அவர், இதை அஜித்திடமும் கூறினாராம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...