தூத்துக்குடி போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, செய்தியாளர்களை அவமதிக்கும் தோனியிலும், மிரட்டும் தோனியிலும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகளால் தான் காவல் துறை துப்பாக்கி சூட்டை நடத்தியது. சீருடையில் இருக்கும் காவலர்களை அடிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று கூறியவர், “எதற்கு எடுத்தாலும் போராட்டம்...போராட்டம்...என்று இருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்” என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் இத்தகைய கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பொது மக்களும் ரஜினிகாந்தின் மீது கோபமடைந்துள்ளனர்.
ஏற்கனவே, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரஜினிகாந்த் திணறுகிறார், என்ற கருத்து நிலவி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் பேசியிருப்பது, பலரையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த பேச்சுக்கு பல பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...