‘வெண்ணிலா கபடி குழு’ என்று தனது முதல் படத்தையே விளையாட்டை மையமாக வைத்து எடுத்து வெற்றிக் கண்ட இயக்குநர் சுசீந்திரன், பல ஜானர்களில் படம் இயக்கி வெற்றி பெற்று வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கி வெற்றிக் கண்ட அவர் தற்போது கால்பந்தை கையில் எடுத்துள்ளார். ஆம், சுசீந்திரன் அடுத்ததாக கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அப்பட்த்திற்கு ‘சாம்பியன்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை ஜி.கே.ரெட்டி கேமிராவை ஆண் செய்து தொடங்கி வைத்தார். ரோஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
அரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல கால்பந்தாட்ட வீரரும் நடிகருமான விஜயன் இப்படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கே.ராகவி தயாரிக்கும் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...