திரைப்பட இசையமைப்பாளர் குரு கல்யாண், ‘சோல் சாங்’ (Soul Song) என்ற இசை செயலியை உருவாக்கியுள்ளார். தமிழில் ‘உயிர் பாட்டு’ என்று அழைக்கப்படும் இந்த இசை செயலி மூலம், குரு கல்யாணுடன் நேரடி தொடர்பில் இருப்பதோடு, அவரது பாடல்கள், நேர்கானல்கள், செய்திகள், முகநூல் பக்கங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் முதல் வெளியீட்டாக “பயிர் வளர்க்கும் பாடல்” என்ற தலைப்பில் “இசையால் உரம்” எனும் தனிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள விவசாயிகளின் பயிர், தாவரங்கள் நன்கு வளர்ந்து மிகுந்த மகசூலை ஈட்ட உதவ வேண்டும் என்று இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆராய்ந்த இசை நுணுக்கங்களையும், வார்த்தைகளையும் கொண்ட இப்பாடலை தங்களது பயிர்களுக்கும், தாவரங்களுக்கும், கொடி மற்றும் மரங்களுக்கும், வயலிலோ வேறு எங்கு தேவையோ அங்கு தினசரி ஒரு முறையோ பல முறையோ ஒலிக்க செய்தால், பெரிய மகசூலை ஈட்ட உதவியாக இருக்குமார்.
சோல் சாங் செயலியை பதிவிறக்கம் செய்ய, https://snappy.appypie.com/index/app-download/appId/cc200db13f6b முகவரியை க்ளீக் செய்யுங்கள்.
இப்பாடல் இந்த செயலியில் உள்ள லேட்டஸ்ட் (Latest) என்ற பிரிவில் இசைக்கணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...