டான்ஸால் மட்டும் அல்ல நடிப்பாலும் மிரட்டுவேன், என்பதை ‘பரதேசி’ மூலம் நிரூபித்த வேதிகா, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் பாலிவுட்டில் களம் இறங்குகிறார். அவர் இயக்க உள்ள இந்தி படத்தில் வேதிகா தான் ஹீரோயின். கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படம், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘த பாடி’ என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் ஆகும்.
இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ரிஷி கபூர் நடிக்கும் இந்த படத்தில் ‘காலகண்டி’ பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பாலிவுட் பட வாய்ப்பு குறித்து கூறிய வேதிகா, “இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.
இப்படத்தின் ஹீரோயின் தேர்வுக்காக நாடு முழுவதும் ஆடிஷன் நடத்திய பிறகே, இயக்குநர் ஜித்து ஜோசப், வேதிகாவை தேர்வு செய்திருக்கிறார். மேலும், அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி வேடத்திற்கு வேதிகா கச்சிதமாக பொருந்திப் போவதோடு, இம்ரான் - வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும், என்றும் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு மொரீஷியலில் நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...