Latest News :

தமிழ் சினிமாவில் புது முயற்சியாக உருவாகியுள்ள ‘கார்கில்’!
Friday June-01 2018

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி புதிய முயற்சிகளின் மூலம் தான், புதிய படைப்பாளிகள், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும். அப்படி ஒரு படம் தான், சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் என்ன புது முயற்சி என்றால், இந்தப்படத்தில் அவர் ஒரே ஒருத்தர் மட்டும் தான் நடித்துள்ளார்.

 

கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம்.. இதுவும் ஒரு போர் தான்..சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப்படம். ஒரே ஒருத்தர்தான் நடித்துள்ளார், அப்படியானால் காதலி யார் என கேட்கிறீகளா? அதுதான் படத்தின் ட்விஸ்ட்டே.

 

காதலில் நம்பிக்கை மிக அவசியம், அந்த நம்பிக்கை காதலை சேர்த்து வைக்கும் என்கின்ற நல்ல கருத்துடன், புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க  பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ளது.

 

இளைஞர்கள், காதலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு சென்சார் அதிகாரிகள் ‘U’சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளனர். ஜூன்-22ல் திரைக்கு வர தயாராக இருக்கும் இந்த புதிய முயற்சி மக்களின் ஆதரவை நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கையில்  காத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சிவானி செந்தில்

 

சுபா செந்தில் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல்களை பாரி இளவழகன் மற்றும் தர்மா எழுத விக்னேஷ் பாய் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கணேஷ் பரமஹம்ஸா படத்தொகுப்பை அபிநாத் மேற்கொண்டுள்ளார்.


Related News

2698

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

Recent Gallery