ரஜினிகாந்தின் ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம், என்று சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் கூறுகையில், “
ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள்.
சினிமா வேறு அரசியல் வேறு. காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் இது திரைப்படம். அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை. இது கண்டிப்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இது தொடர்பாக சந்திப்போம். காலா படம் எல்லா இடங்களிலும் நல்லபடியா வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் பேசியுள்ளோம் அது தனிப்பட்ட கருத்து அது ஒரு படத்தை பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
ஒவ்வொரு மனிதருக்கும் தனி தனி கருத்து இருக்கும். என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நான் ஒரு பதில் சொல்வேன் மற்ற நடிகர்கள் ஒரு பதில் சொல்வார்கள். ஐ.பி.எல் விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை பற்றி நீங்கள் பாரதிராஜா சார் கிட்டதான் கேட்க வேண்டும். ரஜினி சார் அரசியல் வருவது தவறு கிடையாது புது முகங்கள் அரசியலுக்கு வர வேண்டும் தான் அந்த அடிப்படையில் ரஜினி சார் வருகிறார். படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே மாநிலங்கள் ஒரு எல்லை கோடு அவ்வளவுதான்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது அதில் பதிமூன்று பேர் இறந்துள்ளார்கள் கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என எனக்கும் தெரியும் நானும் ஓட்டு போட்டவன் தான். யார் சுட சொன்னது என்று கேட்டதற்கு டெப்டி தாசில்தார் என்று சொல்கிறார்கள். எஸ்.பி,கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷியம் என்னவென்றால் கணக்கில் வந்த பதிமூன்று பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுத வேண்டும். 144 தடை போட்டால் முட்டிக்கு கீழே தான் சுட வேண்டும் அது எல்லாருக்குமே தெரிந்தது. மக்களுக்கு தேவையான சில விஷியம் ஜல்லிகட்டு பிரச்சனையா இருக்கட்டும் நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சனையா இருக்கட்டும் அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷியமாக இருக்கும். இரவில் நாலு பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள். இது இலட்ச கணக்கான பேர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டால் தனம்.
பிரதமர் வெளிநாடு போகாமல் உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தாலே சந்தோஷம் தான். தமிழ் சினிமாவுக்காக நாங்களும் போராடிட்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் உள்நாட்டு பிரச்சனைகளை கவனியுங்கள். நல்லது செய்தால் நான் அவருக்கு தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும். பதிமூன்று பேர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பா ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். பதிமூன்று போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு தான் அவர்களை மறக்க கூடாது. பாரத பிரதமரை வாக்களித்தவனாக வேண்டி கேட்டுகொள்கிறேன் நம் நாட்டு பிரச்சனையை கவனியுங்கள்.” என்று தெரிவித்தார்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...