100 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் தற்போது இருந்தாலும், தமிழர்களின் நம்பர் ஒன் சேனலாக இருப்பது என்னவோ சன் டிவி தான். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென்னிந்தியாவில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக திகழ்வதும் சன் நெட்வொர்க் தான்.
போட்டிக்காக எத்தனை புதிய சேனல்களும், எத்தனை வித்தியாசமான நிகழ்ச்சிகளும் வந்தாலும், மக்களின் கை என்னவோ ரிமோட்டில் சன் டிவியை தான் தேர்ந்தெடுக்கிறது. அந்த அளவுக்கு மக்களோடு கலந்திருக்கும் சன் டிவி தற்போதும் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், வட இந்தியாவிலும் சன் டிவி கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறது. ஆம், விரைவில் மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் சேனல் தொடங்க சன் நெட்வொர்க் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...