ரஜினிகாந்தின் ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், கர்நாடக வர்த்தக சபை ‘காலா’ படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தடை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவை தொடர்ந்து நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் வெளியாகும் நேரத்தில் இப்படை தடைகள் அதிகரித்து வருவதால், படத்தின் வசூல் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தை ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...