பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கர்நாடாக வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நாடார் சமூகமும் ‘காலா’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க இருக்கிறது.
இது குறித்து கூறிய நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், “ரஜினிக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்னை எதுவும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று அங்கு வாழும் தமிழர்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர் கூத்வாலா சேட் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் திரவியம் நாடாருடைய கதையை ரஞ்சித் படமாக எடுத்துள்ளார். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேறு சமூகத்தை சேர்ந்தவராக காட்டுவது தவறு. இதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இப்படத்தின் டிரைலர் வெளியானதன் அடிப்படையிலேயே இப்படத்தை எதிர்க்கிறோம். இயக்குநர் ரஞ்சித் தலித்திய சிந்தனையாளர். நாடாரான ஒருவரை தமிழராக மட்டும் சித்தரித்திருந்தால் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் திரவியம் நாடாரை தலித்தாக காண்பிக்கப்பட்டிருந்தால் எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏற்கனவே வெளியான ரஞ்சித்தின் படம் இதற்கு சான்று.
காலா படத்தில் நாயகனின் நிலை என்ன என்பது ரஜினி தரப்பிலும், காலா படக்குழு தரப்பிலும் உரிய விளக்கம் தர வேண்டும். எங்கள் மனுவை முதலமைச்சருக்கு அளிக்க இருக்கிறோம். காலா படக்குழு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இல்லையெனில் படத்தை ரிலீஸாக விடமாட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் ‘காலா’ படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும், தமிழகத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் படம் வெளியாகும் என்பதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், நாடார் சமூகத்தின் இந்த திடீர் எதிர்ப்பு அவர்களை களக்கம் அடைய செய்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...