ரஜினிகாந்தின் ‘காலா’ வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் வயதான கெட்டப்புகளில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், இந்த புதிய படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ், ரஜினிகாந்தின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...