’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விவசாயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிகர் சூர்யாவும் நடித்திருக்கிறார். அண்ணன் தம்பிகளான கார்த்தியையும், சூர்யாவையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க சில இயக்குநர்கள் முயற்சித்து வந்த நிலையில், அதனை இயக்குநர் பாண்டிராஜ் செய்து காட்டிவிட்டார். அதேபோல், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நயந்தாரா நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...